திருப்பதி செல்லும் பக்தர்களே.., இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க.., தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!திருப்பதி செல்லும் பக்தர்களே.., இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க.., தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிப்ரவரி மாதம் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் விழாக்களின் பட்டியலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்:

இந்தியாவில் உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் வருவாய் அதிகமாக வரும் கோவில்களில் ஒன்று திருப்பதி. மேலும் இந்த கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக விடுமுறை நாட்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என்பது குறிப்பிட தக்கது. இந்த நிலையில் திருப்பதி கோவில் நிர்வாகம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்  முக்கிய விழாக்கள் குறித்த  விவரங்களை தெரிவித்துள்ளது.

  • 09.02.2024 – புரந்தரதாசர் ஆராதனோற்சவம்
  • 10.02.2024 –  திருக்கச்சிநம்பி உற்சவம் தொடக்கம்
  • 14.02.2024 –  வசந்த பஞ்சமி
  • 16.02.2024 –  மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா
  • 19.02.2024 –  திருக்கச்சிநம்பி சாத்துமுறை
  • 20.02.2024 –  பீஷ்ம ஏகாதசி
  • 21.02.2024 –  குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்
  • 24.02.2024 –  குமாரதாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம், மக பவுர்ணமி கருடசேவை.

மேற்கண்ட விழாக்கள் நடைபெறுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மறைந்த அம்மாவை நினைத்து ஏ.ஆர். ரகுமான் செய்த காரியம்.. என்னா மனுஷன்யா இவரு? வெளியான ஷாக் புகைப்படம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *