தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023. திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ! 8வகுப்பு தேர்ச்சி போதும் !
அமைப்பின் பெயர் :
திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. அலுவலக உதவியாளர்
2. ஜீப் ஓட்டுநர்
3. பதிவறை எழுத்தர்
4. இரவு காவலர் போன்ற பணியிட்டங்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. அலுவலக உதவியாளர் – 11
2. ஜீப் ஓட்டுநர் – 9
3. பதிவறை எழுத்தர் – 2
4. இரவு காவலர் – 2 என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
1. அலுவலக உதவியாளர் :
அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் எட்டாம் ( 8ம் ) வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
2. ஜீப் ஓட்டுநர் :
அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் எட்டாம் ( 8ம் ) வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
3. பதிவறை எழுத்தர் :
அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் பத்தாம் ( 10ம் ) வகுப்பு முடித்திவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. இரவு காவலர் :
தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
வயதுத்தகுதி :
18 வயது முதல் 32 வயதிற்க்குள் இருக்கும் நபர்கள் மேலே இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். சில பிரிவினர் , முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவை பெண்களுக்கு வயதுத்தகுதி அளிக்கப்பட்டு உள்ளது.
சம்பளம் :
1. அலுவலக உதவியாளர் – ரூ. 15,700 முதல் ரூ. 58,100
2. ஜீப் ஓட்டுநர் – ரூ. 19,500 முதல் ரூ. 71,900
3. பதிவறை எழுத்தர் – ரூ. 15,900 முதல் 58,500
4. இரவு காவலர் – ரூ. 15,700 முதல் ரூ. 58,100 வரையில் மாத ஊதியமாக தகுதியான பணியாளர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும்.
அனுபவம் :
1. ஜீப் ஓட்டுநர் :
ஜீப் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஓட்டுநர் உரிமத்துடன் ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
வருகின்ற 31.10.2023க்குள் மாலை 5.45 மணிக்குள் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பக்கட்டணம் :
தபால் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்ப இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் ,
ஊரக வளர்ச்சி அலகு ,
3வது தளம் ( E – பிளாக் ) ,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,
திருப்பத்தூர் – 635601 ,
தமிழ்நாடு .
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. பிறப்பு சான்றிதழ்
3. மின்னஞ்சல் / மொபைல் எண்
4. சாதி சான்றிதழ்
5. கல்வி சான்றிதழ்
6. 30 ரூ அஞ்சல் வில்லை
7. ஆதார் கார்டு / ரேசன் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை / வீட்டு வரி ரசீது போன்றவைகளின் ஜெராக்ஸ் இணைக்கப்பட்டு அவைகளில் சுய கையொப்பம் செய்து இருக்க வேண்டும்.
RBI 2லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 !
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.