தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு 2023தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு 2023

  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வருகின்றது. இங்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்க்கு உட்பட்ட வட்டார இயக்க மேலாண்மையில் ” வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ ! 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு 2023

  இத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நிரப்ப இருக்கின்றனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது, சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

 அமைப்பின் பெயர் :   

  தமழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் தூத்துக்குடி மாவட்ட வட்டார இயக்க மேலாண்மையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் இத்துறையில் காலியாக இருக்கின்றது. 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  1. கோவில்பட்டி  – 1

  2. விளாத்திகுளம் – 1 என மொத்தம் 2 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. 

கல்வித்தகுதி :

  1. அரசின் அனுமதியுடன் இயங்கும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  2. கணினி அறிவு இருக்க வேண்டும். 

  3. MS Office ஆறு மாதம் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.  

வயதுத்தகுதி :

  வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு 2023 ! TN MRB Recruitment 2023 !

சம்பளம் :

  வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 12,000 வழங்கப்படும்.

அனுபவம் :

  மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  25.10.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

  மேற்கண்ட துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தினை தபால் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  திட்ட இயக்குநர் ,

  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் , 

  மாவட்ட இயக்க மேலாண்மை அலகு , 

  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ,

  இரண்டாவது தளம் , 

  கோரம்பள்ளம் , 

  தூத்துக்குடி – 628101 , 

  தமிழ்நாடு . 

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை :

  1. கல்வி சான்றிதழ் 

  2. சாதிச் சான்றிதழ் 

  3. அனுபவ சான்றிதழ்  

  4. முன்னுரிமை சான்றிதழ் போன்றவைகளின் ஜெராக்ஸ் இணைக்கப்பட வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம் :

  தபால் மூலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கும் முறை :

  நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படுவர். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *