எடுடா கைய.., பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட தனுஷ் ரசிகரை வெளுத்து வாங்கிய நடிகை.., போட்டோ வைரல்!!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருந்து வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு தனுஷ் ரசிகர்கள் படையெடுத்து வந்த நிலையில், கூட்டத்தில் ரசிகர் துணை நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் கைது..? வீட்டை சுற்றி வளைத்த அமலாக்கத்துறை – டெல்லியில் பரபரப்பு!
அதாவது நேற்று நடந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு துணை நடிகை ஐஸ்வர்யா ரகுபதி கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ரகுபதியிடம் ரசிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நடிகை ரசிகரை அதே இடத்தில் அடித்து தொங்கவிட்டனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!