நாடாளுமன்ற தேர்தல் 2024: மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க 10,000 சிறப்பு பஸ்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு!!நாடாளுமன்ற தேர்தல் 2024: மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க 10,000 சிறப்பு பஸ்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல கிட்டத்தட்ட 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஜூன் 3ம் தேதி வரை கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலுக்காக வெளியூரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாளை(17.04.2024) மற்றும் 18ம் தேதியும் சென்னையில் இருந்து வழக்கம் போல் இயங்கும் 2 ஆயிரத்து 92 பஸ்களுடன், 2 ஆயிரத்து 970 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 154 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. மேலும் அதற்கான முன்பதிவுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மக்களவை தேர்தல்: தபால் வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *