கள்ளக்குறிச்சியில் நாய்கள் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி – பொதுமக்கள் கோரிக்கை!

dog bite news in india கள்ளக்குறிச்சியில் நாய்கள் கடித்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக கிட்டத்தட்ட 20 பேர் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வெறி பிடித்து அலைந்த நாய்கள் அங்கிருந்த 20 பேரையும் துரத்தி துரத்தி கடித்துள்ளது.

இதில் படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த 20 பேரும் தொடர்ந்து அவசர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்று வருவதாலும், நாய்களால் தொடர்ந்து விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே இதுகுறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் 2024  – திமுக வேட்பாளரை அறிவித்த முதல்வர் முக ஸ்டாலின்!!

Leave a Comment