Home » செய்திகள் » கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல் – கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் திட்டம்!

கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல் – கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் திட்டம்!

கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல் - கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் திட்டம்!

கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல்: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பறவை காய்ச்சல் கேரளாவின் சில பகுதிகளில் வீரியம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இந்த காய்ச்சலால் அங்கு கோழி மற்றும் வாத்து உள்ளிட்ட இனங்கள் அழிக்கப்பட்டன. இப்படி இருக்கும் நிலையில் தற்போது கோட்டயம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வெகுவாக பரவி வருவதால் அப்பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்றவைகளை வருகிற மே 29ம் தேதி வரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல்

மேலும்  கோட்டயம் மாவட்டத்தை சுற்றியுள்ள 10 கி.மீ வரைக்கும் அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் வாழும் மக்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று கொள்ளுமாறு அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கோழி பண்ணையில் இருந்த நூற்றுக்கணக்கான கோழிக்கு பறவை காய்ச்சல் வந்து இறந்து போனது. இதனால் மற்ற உயிரினங்களுக்கு பரவி இருக்க வாய்ப்பு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் கோழி, காடை, வாத்து போன்ற  உயிரினங்களை கொல்ல முடிவு எடுத்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. Bird flu news – kerala news – latest seithikal

TNPSC தேர்வுகள் 2024: குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் – தேர்வாணையம் அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top