உத்தரபிரதேசத்தில் கர்ப்பிணி வயிற்றை கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் சிறை: இன்றைய காலகட்டத்தில் மாசமாக இருக்கும் பெண்களின் கணவர்கள் வயிற்றுக்குள் என்ன குழந்தை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக சில தவறான செயல்களையும் செய்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது பன்னா லால் என்பவருக்கு அனிதா என்ற 8 மாத கர்ப்பிணியான மனைவி உள்ளார். இவருக்கு ஏற்கனவே 5 பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், வயிற்றுக்குள் என்ன பாலின குழந்தை இருக்கும் என்று பார்க்க ஆசைப்பட்ட பன்னா லால் அனிதாவின் வயிற்றை அரிவாளால் வெட்டி பார்த்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதற்கு முன்னர் பிறக்கப்போகும் குழந்தை ஆணா தான் இருக்க வேண்டும் என்று மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதை சண்டை முற்றி போய் இப்பவே குழந்தையை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் கணவர் இந்த கீழ்த்தனமான செயலை செய்துள்ளார். இதை தொடர்ந்து அங்கு வந்த அனிதா சகோதரர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் வயிற்றில் இருந்த ஆண் குழந்தை இறந்தது. இதையடுத்து இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 307 (கொலை முயற்சி) மற்றும் 313 (பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஆயில் தண்டனை கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. crime news 2024 – india crime news – tamilnadu latest news
கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல் – கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் திட்டம்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
TNPSC குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் –
தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு
தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய்
6 வயது சிறுமியுடன் கடலில் விழுந்து தற்கொலை செய்த 14 வயது சிறுவன்