9 ஆண்டுகள் அழியாத மை -  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் மூதாட்டி - தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!!9 ஆண்டுகள் அழியாத மை -  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் மூதாட்டி - தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!!

9 ஆண்டுகள் அழியாத மை –  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் கேரள மூதாட்டி: மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கேரள, மணிப்பூர் உள்ளிட்ட 13 இடங்களில் நடைபெற்றது.

பொதுவாக தேர்தலில் வாக்களிக்கும் போது நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக வாக்களிக்க வரும் நபர்களின் விரல்களில் அழியாத வகையில் ஒரு மை வைக்கப்படுகிறது. இதன் மூலம் வாக்களித்த நபர் மீண்டும் வாக்குகளை செலுத்துவது போன்ற தவறுகள் தடுத்து நிறுத்தப்படுகிறது. இந்த மை ஒரு வாரத்தில் மறைந்து விடும். ஒரு சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகலாம். ஆனால் பல வருடங்களாக மை அழியாமல் இருந்து வருவதால் ஒட்டு போடாமல் ஒரு மூதாட்டி திண்டாடி வருகிறார்.

அதாவது கேரளாவை சேர்ந்த உஷா என்பவர் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற கேரளா சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வைக்கப்பட்ட மை, தற்போது ஒன்பது ஆண்டுகள் ஆகியும் அழியாமல் இருந்து வருகிறது. இதனால் அவரால் வாக்களிக்க முடியாமல் இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு அவர் வாக்களிக்க செல்லாத நிலையில், தேர்தல் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மணிப்பூரில் ஓயாத வன்முறை – பயங்கரவாத தாக்குதலில்  2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *