தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு - வலுக்கும் கண்டனங்கள்!!தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு - வலுக்கும் கண்டனங்கள்!!

தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு: தமிழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை தாங்களால் இயன்ற அளவு உதவிகளை செய்து வந்தனர். மேலும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மேலும் வெள்ள நிவாரண நிதி மக்களுக்கு வழங்க நிவாரணம் கோரி முதல்வர் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் இதுவரை நிதி வழங்காமல் இருந்தது. இதனால் 2 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டு முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில, ” தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.  அதில் முதற்கட்டமாக ரூ.115 கோடியை வெளியிட்டுள்ளது.

9 ஆண்டுகள் அழியாத மை –  ஓட்டு போட முடியாமல் தவிக்கும் கேரள மூதாட்டி – தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!!

மேலும் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ரூ.397 கோடி நிவாரணமாக ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் முதற்கட்டமாக ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல், வெள்ளப் பாதிப்புகளுக்கு சேர்த்து மொத்தம் தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு வெறும் 285 கோடி தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *