கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். எனவே தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே ஊட்டி, கொடைக்கானல் என்பது மிகவும் முக்கியமானது என்று எல்லோருக்கும் தெரியும். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வரும் காரணத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக இ பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் சுற்றுலா பயணிகள் முதல் வணிக சங்கங்கள் வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நாளை முதல் மலர் கண்காட்சி ஆரம்பிக்க இருக்கிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கொடைக்கானலில் நாளை முதல் தொடங்க இருக்கும் மலர் கண்காட்சியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ 30ல் இருந்து ரூ 75 ஆகவும், சிறுவர்களுக்கு ரூ 15ல் இருந்து ரூ 35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். kodaikanal flower show 2024 கொடைக்கானல் மலர் கண்காட்சி 2024