கூலி திரைப்படத்திற்கு இளையராஜா நோட்டீஸ் ! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து - முழு தகவல் இதோ !கூலி திரைப்படத்திற்கு இளையராஜா நோட்டீஸ் ! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து - முழு தகவல் இதோ !

கூலி திரைப்படத்திற்கு இளையராஜா நோட்டீஸ். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் இளையராஜா கூலி பட டீசருக்கு எதிராக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்புயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் கூலி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கூலி திரைப்படத்தின் டீசரில் முன் அனுமதி பெறாமல் தன்னுடைய இசையை பயன்படுத்தியதாக யாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அரண்மனை 4 திரை விமர்சனம் ! ஐய்யோ எங்களை காப்பாற்றுங்கள் என்று ரசிகர்கள் கதறல் !

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காப்புரிமை விவகாரம் என்பது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்சனை என்று இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் குறித்து சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *