ராம நவமி 2024ராம நவமி 2024

ராம நவமி 2024. ராமாயணம் என்பது மிகப்பெரிய காவியம். பகவான் ராமர் மிகச்சிறந்த மனிதன் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவர் இரக்கம், மென்மை, நீதி மற்றும் நேர்மை ஆகியவற்றின் உருவகமாக இருந்தார். உலகில் உள்ள அனைத்து அதிகாரங்களையும் அவர் கொண்டிருந்தாலும், அவர் அமைதியாகவும் மென்மையாகவும் இருந்தார் என ராமாயணத்தில் ராமபிரானை பற்றி போற்றி கூறப்பட்டுள்ளது. விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் அயோத்தி தேசத்தில் மனித உருவில் அவதரித்த நாளே ராம நவமி.

ராம நவமி 2024

காரணம்:

ராம நவமி என்பது மன்னன் தசரதனின் மகனான ராமர் பிறந்ததைக் கொண்டாடும் பண்டிகையாகும். அயோத்தியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மன்னன் தசரதனின் வாரிசு பிறந்தது, பல வருடங்களாக வாரிசு இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததால், ராஜாவுக்கு கனவு நினைவான மகிழ்ச்சியான தருணம் ஆகும். அதனை கொண்டாடுவதே ராமநவமி.

வரலாறு:

தசரத மன்னன் ஆட்சியின் போது, ​​அயோத்தி பெரும் செழிப்பான காலகட்டத்தை அடைந்தது. ஆனால் தசரதனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது – அவருக்கு குழந்தைகள் இல்லை. எனவே அஸ்வமேத யாகம் செய்ய முடிவு செய்தார். விரிவான மற்றும் கடினமான சடங்குகளை கடைபிடிக்க வேண்டும். யாகத்திற்கு ரிஷி ரிஷ்யஷ்ரிங் தலைமை தாங்கினார். இந்த யாகம் அயோத்தியில் ஒரு பெரிய நிகழ்வாக இருந்தது. இறுதியில், ரிஷ்யஷ்ரிங் ஒரு மந்திரத்தை ஓதி, நெருப்புக்கு அர்ச்சனை செய்தார்.

தசரதரின் யாகம் முடிந்ததும், யாக குண்டத்தின் மேல் ஒரு பளபளப்பான உருவம் தோன்றி, மன்னருக்கு “பாயாசம்” என்ற தெய்வீக பானத்தை அளித்தது, அது அவரது ராணிகளான கௌசலை, கைகேயி மற்றும் சுமித்ரா ஆகியோருக்கு கொடுக்கப்பட்டது.

அந்த நிகழ்வின் பின், கௌசலைக்கு, சித்திரை மாதம், வளர்பிறை புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, கடக லக்கினம், நவமி திதியில் ராமன் பிறந்தார். அதனை தொடர்ந்து, கைகேயி பாரதனையும், சுமித்ரா லட்சுமணன் மற்றும் சத்ருக்னனையும் பெற்றெடுத்தனர்.

மாபெரும் இதிகாசமான ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ராமரின் கதை, ஜாதி, மதம் மற்றும் மத வேறுபாடின்றி அதற்கு அப்பாற்பட்ட ஒரு காவியமாகும். ராமர் ஒரு புராண உருவம் மட்டும் அல்லாமல் உண்மை அனைத்திற்கும் உருவகமாகவும், ராவணனை வென்ற மனிதனாகவும், ராமரின் இதயம் தெய்வீகத்தால் கடவுளாகவும் திகழ்ந்தார். எனவே, அவர் பிறந்த நவமி நாள் ஒவ்வொரு ஆண்டும் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024 ! ஏப்ரல் 9 ம் தேதி முதல் தொடக்கம் – நேரிலும் சென்று வாங்கலாம் !

ராம நவமி 2024:

சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை அமாவாசைக்குப் பிறகு ஒன்பதாம் நாள் ராம நவமி வருகிறது.

இந்த 2024 ஆம் ஆண்டு ராம நவமி, சித்திரை மாதம் 4ஆம் நாள், அதவாது ஏப்ரல் 17 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது.

கொண்டாடும் விதம்:

ராம நவமி பஜனை நிகழ்ச்சிகள், பூஜைகள், ரத யாத்திரைகள் மற்றும் பந்தல் நிகழ்ச்சிகள் என பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. ராமர் பிறந்த இடமான அயோத்தியில், இந்த விழாவைக் கொண்டாடும் வகையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் பிரம்மாண்டமான திருவிழா நடைபெறும்.

மேலும், ராம நவமி அன்று பக்தர்கள் விரதம் இருந்தும் வழிபடுவர். இது ஒருவரின் பாவங்களை அழித்து முக்தி அளிக்கக்கூடிய நாட்காட்டியில் மிகவும் புகழப்பட்ட விரதங்களில் ஒன்றாகுவும் கருதப்படுகிறது.

ராம நவமி அன்று கண்கவர் வாணவேடிக்கையுடன் முடிவடையும் வகையில் வட இந்தியாவில் பல இடங்களில் திருவிழாவையொட்டி கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

Join WhatsappClick here

இவ்வாறு, ராம நவமி என்பது பல நூறு ஆண்டுகளாக பக்தர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *