சபரிமலை நடை திறப்பு மே 2024 - வைகாசி மாத பூஜைக்காக சிறப்பு ஏற்பாடு - முன்பதிவு கட்டாயம்!!சபரிமலை நடை திறப்பு மே 2024 - வைகாசி மாத பூஜைக்காக சிறப்பு ஏற்பாடு - முன்பதிவு கட்டாயம்!!

சபரிமலை நடை திறப்பு மே 2024: உலகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருடந்தோறும் கார்த்திகை மாதம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இது போக கோவிலில்  மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களிலும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதுமட்டுமின்றி சித்திரை மாதம் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அப்போது எந்த ஒரு பூஜையும் நடைபெறாது.

இதனை தொடர்ந்து 15ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அந்த சமயம்   கணபதி ஹோமம், புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம், உச்ச பூஜை,  உஷ பூஜை,   நிர்மால்ய தரிசனம், அத்தாழ பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். இதையடுத்து மே 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, களபாபிஷேகம் , கலச பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். மேலும் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சபரிமலை நடை திறப்பு மே 2024

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 2024 நாளை வெளியீடு? பரபரப்பான கட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *