சூர்யாவின் அடுத்த சம்பவம் கன்பார்ம்.., ரஜினி பட இயக்குனருடன் கூட்டணி.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!சூர்யாவின் அடுத்த சம்பவம் கன்பார்ம்.., ரஜினி பட இயக்குனருடன் கூட்டணி.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

சூர்யா 44வது படம்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா படைப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது’ என படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சூர்யாவின் 44-வது படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூர்யா தயாரிக்கும் நிலையில், படத்தோட அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் பின்னணியில் தீ பற்றி எரிந்துகொண்டிருக்க மரத்தில் அம்பு ஒன்று குத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ‘லவ் லாஃப்டர் வார்’ (love Laughter war) என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது படத்தோட தலைப்பா அல்லது படத்தின் ஜானரா என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

எதிர் நீச்சல் ஜனனியின் உண்மையான அப்பா அம்மாவை பார்த்துள்ளீர்களா?.., இதோ அருமையான புகைப்படம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *