தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ் – நாளை தமிழகம் முழுவதும் மாபெரும் அன்னதானம் –  புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!

தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ்: தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும், தலைசிறந்த நடிகராகவும் கோலிவுட் கோட்டையில் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய்.தற்போது இவர் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து தளபதி 69 படத்தை H.வினோத் இயக்க இருக்கிறார். இதுவே அவரின் கடைசி படம் என்று தளபதி விஜய் தெரிவித்துள்ளார். தற்போது “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கிய நிலையில், வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் களம் காண இருப்பதாக TVK தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக கட்சி தலைவர் விஜய்யின் அடுத்த மூவ்

இப்பொழுது தவெக கட்சியினர் அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில்  தவெக கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது நாளை (செவ்வாய்கிழமை) உலக பட்டினி தினம் என்பதால் தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மாபெரும் அன்னதானம் நடைபெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிக்கை  அனுப்பியுள்ளார். மேலும் நம் கட்சியின் விதிமுறைகளை பின்பற்றி மக்கள் நலப் பணியில் ஈடுபட வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!

Leave a Comment