World Cup 2023 ! நெதெர்லாந்திடம் அடி வாங்குமா இலங்கை !World Cup 2023 ! நெதெர்லாந்திடம் அடி வாங்குமா இலங்கை !

  World Cup 2023 நெதெர்லாந்திடம் அடி வாங்குமா இலங்கை. ஐசிசி உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஸ்ரீலங்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றனர். முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 262 ரன்கள் எடுத்து உள்ளனர். தற்போது 263 ரன்களை இலக்காக கொண்டு விளையாட ஆரம்பித்து உள்ளனர். சற்று முன் 13.3 ஓவர்கள் முடிவில் 78 ரன்கள் எடுத்து 2 விக்கெட் இழந்துள்ளது.

World Cup 2023 ! நெதெர்லாந்திடம் அடி வாங்குமா இலங்கை !

World Cup 2023 ! நெதெர்லாந்திடம் அடி வாங்குமா இலங்கை !

இலங்கை & நெதர்லாந்து :

  13வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்தியாவில் இருக்கும் பல முக்கிய மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. அதன் படி இன்று லக்னோ மைதானத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றனர். 

JOIN WHATSAPP CHANNEL

  இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது. போட்டிகளில் அதிரடி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். எனவே நெதர்லாந்து அணி 200 ரன்களை கடப்பது கஷ்டம் என்ற நிலை இருந்தது. 50 ஓவர்கள் கொண்ட இப்போட்டியின் இறுதியில் நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் எடுத்து இருக்கின்றது.

போட்டியை வெல்லுமா இலங்கை :

  தற்போது இலங்கை அணி 263 ரன்களை இலக்காக கொண்டு விளையாட ஆரம்பித்து விட்டனர். இப்போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றது இலங்கை கிரிக்கெட் அணி. ஏனென்றால் இதற்க்கு முன் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து உள்ளது. நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இதற்க்கு முன் விளையாடிய 5 ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதனால் இப்போட்டியை இலங்கை வெல்ல வாய்ப்புகள் இருக்கின்றது.

வாவா சுரேஷுக்கு பாம்பு பிடிக்க லைசென்ஸ் ! வனத்துறை முடிவு ! 

புள்ளி பட்டியலில் யார் முன்னேறுவர் :

  உலகக்கோப்பை 2023ன் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றனர். ஆனால் நெதர்லாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 1ல் வெற்றியும் 2ல் தோல்வி அடைந்தும் உள்ளது. ஆனால் இலங்கை அணி முன்னர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து உள்ளது. 

World Cup 2023 நெதெர்லாந்திடம் அடி வாங்குமா இலங்கை. தற்போது பேட்டிங்கில் களம் இறங்கி இருக்கும் இலங்கை அணிக்கு 263 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இலங்கை அணியா இல்லை நெதர்லாந்து அணியா பொறுத்திருந்து பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *