உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட ஹோட்டல் - எங்கு பார்த்தாலும் தங்கம் தான் - எங்கே உள்ளது தெரியுமா?உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட ஹோட்டல் - எங்கு பார்த்தாலும் தங்கம் தான் - எங்கே உள்ளது தெரியுமா?

உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட ஹோட்டல்: தற்போதைய காலகட்டத்தில் ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கு மக்கள் அல்லல் பட்டு வரும் நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹோட்டல் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அட ஆமாங்க, வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் தான் அந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு ஹனோய் கோல்டன் லேக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரண்டு பகுதிகளிலும், 24 கேரட் தங்கத்தால் முலாம் பூசப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஹோட்டலில் இருக்கும் நீச்சல் குளம், கழிவறை இருக்கை, குளிக்கும் பாத், மொட்டை மாடி என எல்லாமே தங்கத்தால் முலாம் பூசப்பட்டுள்ளது. அது போக இந்த ஹோட்டலில் தங்கும்  விருந்தினர்களுக்கு தங்க கோப்பையில் தான் டீ தருகிறார்கள்.

அங்கு பயன்படுத்தும் கரண்டிகள், ஸ்பூன் என எல்லாமே தங்கத்தால் தான் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நடைபாதை, ரூம், வெளிச்சுவர் சுமார் 54000  அடி பரப்பு உள்ளிட்ட அனைத்தும் தங்கத்தால் பூசப்பட்டது தான். மேலும் இந்த ஹோட்டலில்  சுமார் 25 தளங்கள் இருக்கிறது. அதுமட்டுமின்றி விருந்தினர்கள் தங்க 400 அறைகள் இருக்கிறது. இந்த ஹோட்டலே உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *