சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி - மகனை இழந்த கொஞ்ச மாசத்துல இப்படி ஒரு நிலைமையா?சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி - மகனை இழந்த கொஞ்ச மாசத்துல இப்படி ஒரு நிலைமையா?

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நம்பிக்கை கூறிய விசுவாசியும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமி குறித்து தற்போது இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுக கட்சியை ன் நிறுவிய போது அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளார். அதிமுகவில் இணைந்து 1984ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு  வெற்றி பெற்றார். அதுமட்டுமின்றி 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மேயர் என்ற பதவியில் அமர்ந்தார்.

இதற்கிடையில் அவர் மனித நேயம் என்ற அறக்கட்டளையை தொடங்கி ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி வருகிறார். இதன் மூலம் ஏகப்பட்ட பேர் நல்ல நிலைமைக்கு வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் அவருடைய  மகன் வெற்றி துரைசாமி வெளிநாட்டில் நடந்த கார் விபத்தில் பலியானார். இந்த துக்கத்தில் இருந்து மீளாமல் இருந்து வரும்  சைதை துரைசாமி அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து அவரை குடும்பத்தினர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி – chennai ex mayor – saidai duraisamy – vetri duraisamy – politics news – tamilnadu latest news – Apollo Hospitals

மீனவர்கள் கவனத்திற்கு – ராமேஸ்வரம்  பாம்பன்  ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *