மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைப்பேசி எண் அறிமுகம் ! காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைப்பேசி எண் அறிமுகம் ! காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க இலவச தொலைப்பேசி எண் அறிமுகம். தமிழகத்தில் கடந்த மே 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க, மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களின் துணைத்தேர்வு போன்ற விவரங்களை அறிந்து கொள்ள பள்ளிக்கல்வி துறை சார்பில் இலவச தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது +2 மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுப்பது, எந்த கல்லுரியில் சேரலாம், எப்படி விண்ணப்பிப்பது மற்றும் மாணவர்களுக்கான கல்விக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுவது போன்ற சந்தேகங்களை 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வு தொடர்பான விவரங்களை அறிய மேலே கொடுக்கப்பட்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தமிழகத்தில் அமுல் பால்பண்ணை அமையவில்லை ! தமிழக பால்வளத்துறை விளக்கம் !

இதனையடுத்து மாணவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தங்களின் சந்தேகங்களை கேட்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *