அப்பா அம்மாவுக்கு அப்புறம் அவர் தான் எல்லாம்.., சோறு போட்ட கடவுள் சார்.., கண்கலங்கிய வைகை புயல் வடிவேலு!!அப்பா அம்மாவுக்கு அப்புறம் அவர் தான் எல்லாம்.., சோறு போட்ட கடவுள் சார்.., கண்கலங்கிய வைகை புயல் வடிவேலு!!

கண்கலங்கிய வைகை புயல் வடிவேலு: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை காமெடியால் கட்டி போட்டவர் தான் வைகை புயல் வடிவேலு. கவுண்டமணி – செந்தில் பீக்கில் இருந்த போதே வடிவேலு தனது நடிப்பாலும், உடல் மொழியாலும், டைமிங்கில் அடிக்கும் கவுண்டரில் அவர் பெயர் அடிபட தொடங்கியது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் படத்தில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, மாமன்னன் படத்தின் மூலம் காமெடி மட்டுமின்றி சீரியஸான கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்று நிரூபித்து காட்டினார். தற்போது நடிப்பு அரக்கன் பகத் பாசில் நடித்து வரும் புதிய படத்தில் வடிவேலு முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது “டாப் குக்கு டூப்பு குக்கு” என்ற ஷோவில் கலந்து கொண்டார். அப்போது வெங்கடேஷ் பட் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

அதில் அம்மா அப்பாவுக்கு பிறகு யாருக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு வடிவேலு, ”  கவுண்டமணி செந்தில் இருக்கும் சமயத்தில்  என்னை நடிக்க வைத்து அழகு பார்த்தவர் தான் ராஜ்கிரண். அவர் ஆபிசில் வைத்து எனக்கு சோறு போட்டார். அப்பா அம்மாக்கு அப்புறம் அவர் தான் என்னோட தெய்வம் என்று கண்கலங்கி பேசியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. tamil cinema comedy actor – comedy king – vadivelu news – actor rajhiran

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு  – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *