கவுண்டமணி நிஜ வாழ்க்கைல இப்படியா? செந்திலே பயப்படுவாரு.., உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்!!

கவுண்டமணி நிஜ வாழ்க்கைல இப்படியா? தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் இருந்து 2k வரை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர்கள் தான் கவுண்டமணி – செந்தில். இவர்கள் சேர்ந்து கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் சேர்ந்து நடித்த எல்லா படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை என்றே சொல்லலாம். இந்த காம்போ திரும்ப கிடைத்திராதா  என்று ரசிகர்கள் இப்பொழுது வரை ஏக்கத்தில் தான் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கவுண்டமணி குறித்து ஆவாரம்பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷர்மிலி சில வார்த்தை பேசியுள்ளார்.

கவுண்டமணி நிஜ வாழ்க்கைல இப்படியா?

இதில், ” கவுண்டமணி படத்தில் நடிப்பது போல் காமெடி கிடையாது. நேரில் அவர் யாரிடமும் பேச மாட்டார். தனியாவே உக்காந்திருப்பாரு. சொல்லப்போனால் அவரிடம் ஏதாவது பேச வேண்டும் என்றாலே நாங்கள் பயப்படுவோம். ஏன் செந்திலே அவர் கிட்ட பேச பயப்படுவாரு. குறிப்பாக அவருக்கு முன்னாடி செந்தில் உட்கார மாட்டார். அவருக்கு பின்னாடி சேரில் தான் அவர் உட்காருவார்.  அந்த அளவுக்கு பயப்படுவாரு. அது பயம்னு சொல்றத விட ஒரு மரியாதை தான்” என்று தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் தகவல்!!

Leave a Comment