தமிழக அரசு பேருந்தில் முதல் பெண் கண்டக்டர்?.., யார் இவர்?.., எப்படி இந்த பெருமையை அடைந்தார் தெரியுமா?தமிழக அரசு பேருந்தில் முதல் பெண் கண்டக்டர்?.., யார் இவர்?.., எப்படி இந்த பெருமையை அடைந்தார் தெரியுமா?

முதல் பெண் கண்டக்டர்

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர். சமீபத்தில் கூட சர்மிளா என்ற பெண் முதல் பேருந்து ஓட்டுனராக கலக்கி வந்த நிலையில், தற்போது மதுரையை சேர்ந்த ஒரு பெண் முதல் பெண் கண்டக்டராக சேர்ந்து சாதனை படைத்துள்ளார். அதாவது மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள லூர்து நகரை சேர்ந்தவர் தான்  ரம்யா. இவருடைய கணவர் பாலாஜி கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் காரைக்குடி மண்டலம் மதுரை உலகனேரி கிளையில் ஓட்டுநராக பணியாற்றிய சமயத்தில் கொரோனவால் உயிரிழந்தார். மேலும் அவருக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் வருமானமின்றி கஷ்டபட்டு வந்துள்ளனர். இதனால் கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்குமாறு மனைவி ரம்யா போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தான் இருக்கும் குடும்ப கஷ்ட நிலையை விளக்கி தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு ஒரு மனுவை கொடுத்தார். அதன் பின்னர் அந்த மனுவை முதல்வர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரனுக்கு பரிந்துரைத்த நிலையில்  ரம்யாவின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்க வேண்டும் உத்தரவிட்டார். அதன்படி அவருக்கு மதுரை முதல் ராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் கண்டக்டர் பணி அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று பணியை தொடங்கிய ரம்யாவுக்கு அடுத்த 10 நாட்கள் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம்  அரசு போக்குவரத்து கழக முதல் பெண் கண்டக்டர் என்ற பெருமையையும் ரம்யா பெற்றுள்ளார். இது குறித்து பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி காலமானார்.., பதறி போன மதிமுகவினர்.., தேர்தலில் நடக்க போவது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *